கிழக்கு மாகணத்தில்அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மாத்திரமே உள்வாங்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
அத்தோடு இந்த விடயத்தில் மாற்றம் தேவையென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நிதி ஒதுக்கீடு என்பது ஒரு பாகுபாடான முறையில் கிழக்கு மாகணத்தில் நடைபெறுவதை கண்கூடாகப் பார்க்கின்றோம். நிதி ஒதுக்கீடு மாத்திரமல்ல வேலை வாய்ப்புகள்கூட பாகுபாடான முறையில் நடைபெறுவதைப்பார்க்கின்றோம்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச, நகர, மாநகர சபைகளுக்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது மாநகர சபைக்கு ஒரு சதம்கூட ஒதுக்கப்படவில்லை. மேலும் தமிழ் பிரதேசங்களிலும் அந்த நிதி ஒதுக்கப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.





