கருத்துகளை பாகிஸ்தான் வெளியிடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்க்கு, பிரதமர் நரேந்திர மோடி முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்கா ஜனாதிபதியுடன் மோடி தொலைபேசியில் உரையாடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “பிரதமர் மோடியும் ஜனாதிபதி டிரம்பும் சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.
இதன்போது இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
பிராந்திய நிலவரம் குறித்து அவரிடம் பேசிய பிரதமர், “இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துகளை, சில தலைவர்கள் வெளியிட்டு வருவது பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழலை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கும் பாதையில் பயணிக்கும் எந்த நாட்டுக்கும் வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா தயாராக உள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். தங்களது அடுத்த சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளதாக இருவரும் கூறினர் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.