மத்திய மனிதவள அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதிய கல்வி கொள்கையின் படி 5 தேர்வுகள் நடைபெறுகிறன. இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு சுமையாக அமையும்.
தற்போதுள்ள கல்வி முறை சரியான பாதையிலேயே செல்கிறது. ஆகையால் புதிய கல்வி கொள்கை தேவையில்லை.
ஆராய்ச்சி மாணவர்களுக்காக சிறந்த நிதியை ஒதுக்கினால் வெளிநாட்டுகளை போல சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே அரசு பாகுபாடின்றி ஆராய்சிக்கான சிறந்த நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.