திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமானது.
கட்சியின் திருகோணமலை மாவட்டத்தலைவர் குகதாசன் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், துரைரட்ணசிங்கம், ஶ்ரீநேசன், நகரசபை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இச்சந்திப்பில், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாகவும், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக தமிழ் தலைவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.