பாற்றாக்குறை, எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரிய நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.
புகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் மின்சார காரை வெளியிடவுள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் திகதி நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் ஜெர்மனி, சீனா, மற்றும் கனடா என மூன்று நாடுகளில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் இருபதாயிரம் கார்களை மாத்திரம் தயாரித்து வெளியிடவும் அந்தநிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் இந்த கார் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் அறிமுகமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரினை உருவாக்கும் திட்டத்தை 2015ம் ஆண்டிலேயே போர்ஷே நிறுவனம் ஆரம்பித்துவிட்டது.
‘ஈ-மிஷன் கொன்செப்ட்’ எனப்படும் மின்சார கார் எண்ணக்கரு மூலமாக கவரப்பட்ட போர்ஷே நிறுவனம் தற்போது ஒரு காரை தயாரித்துள்ளது.
3.5 நொடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த கார் கொண்டுள்ளது. இந்த காரின் அதிக பட்ச வேகம் 500 கி.மீ ஆகும்.