மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வீரமணி மேலும் கூறியுள்ளதாவது, “பால் விலையை திடீரென்று லீட்டருக்கு 6 ரூபாய் விலைக்கு உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினரே அதிகளவு பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
ஆகையால் பால். முட்டை ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி, மக்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் தமிழக அரசு இருக்க வேண்டும் .
எனவே மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து, உற்பத்தியாளர் நலன், உரிமை, நுகர்வோர் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டியது அவசியம்” என கி.வீரமணி கூறியுள்ளார்.