LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, August 1, 2019

முல்லைத்தீவில் 77 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 126 பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் 126 பேரில் ஏற்கனவே 14 பேர் நியமனம் பெற்றவர்கள் மீளவும் உள்வாங்கப்பட்ட நிலையில் அவர்களை தவிர்த்து இம்முறை 112 பேர் இந்த நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 35 பேருக்கான நியமனங்கள் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 77 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் மற்றும் பிரதம கணக்காளர் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7