 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருந் திருவிழாவின் 4ஆம் நாள் திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை ஆகியோருடன் வேல் பெருமானும் பச்சை நிற மயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.
வள்ளி, தெய்வானை சமேதரராய் உள் வீதியுலா வந்த வேல் பெருமான் அதனைத் தொடர்ந்து வெளிவீதியுலா வந்தார்.
இன்றைய நான்காம் நாள் உற்சவத்தின் போது பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.
இன்றும், நல்லூர் ஆலய வளாகத்திற்குள்ளும், ஆலய வெளிச் சூழலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் பக்தர்கள் சோதனைகளின் பின்னர் ஆலய வளாகத்துள் அனுமதிக்கப்பட்டனர்
 
                  



 
 




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
