
அத்தோடு மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படுவதற்கு முதல்நாள் அதாவது 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறினார்.
இதன் பின்னர் அவர் சிங்கப்பூரில் இருப்பது தெரியவர, அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான ஆவணங்களை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
