
பிரச்சினைக்கு உடனடித் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.போதான வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள இலங்கை வங்கியின் கிளை அலுவலக வாசலில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள அவர்கள், இதற்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.
அவ்வாறு பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படாதவிடத்து, அடுத்த கட்ட போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, வங்கி ஊழியர்களின் கடன்களுக்கான புதிய வரி விதிப்புக்கு எதிராகவும், ஓய்வூதியர்களின் பிரச்சினைகளுக்காகவும் இன்று வவுனியா, மற்றும் மட்டக்களப்பிலும் வங்கி ஊழியர்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
