
செல்லாத பொலிஸார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் பொலிஸ் ஆணையர்களுக்கு அனுப்பிய அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும் அதில், இரு சக்கர வாகனத்தில் சீருடை மற்றும் சாதாரண உடையில் செல்லும் காவலர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமல், காவலர்கள் எவரேனும் இருசக்கர வாகனத்தில் பயணித்தாலோ அல்லது போக்குவரத்து விதிகளை மீறினாலோ, சாதாரண மக்களுக்கு விதிக்கப்படும் அபராத நடவடிக்கையை காவலர்களுக்கும் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக பின்பற்றப்பட்டதை உறுதி செய்யும்படியும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
