
ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தப்போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியிறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், “ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் உட்பட வர்த்தக பரிவர்த்தனையை நிறுத்தும் எந்த திட்டமும் இல்லை.
அமெரிக்கா தடை விதித்துள்ளதால் ஈரானுடனான வர்த்தக தொடர்பை இந்தியா துண்டித்துக் கொள்ளாது.
ஈரானுடம் இருந்து தொடர்ந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்படும். அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இந்தியா சமரசம் செய்துக் கொள்ளவில்லை.
ஜி 20 மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கும், ஈரானிடம் மசகு எண்ணெய் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மூன்றாவது நாட்டிற்காக இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானிடம் மசகு எண்ணெய் கொள்வனவில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
