கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
நோர்த் யோர்க் – ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 60 வயதான இரண்டு பெண்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றையவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





