அந்தவகையில் குறித்த விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்படும் என அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 புத்திஜீவிகள் அடங்கிய குழு தற்போது அறிக்கையை உருவாக்கி வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் அது தயாராக இருக்கும் என்றும் கூறினார்.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் ஓகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் பொது விவாதத்திற்கு முன்வைக்கப்படும் என்றும் பின்னர் ஒக்டோபரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.