
இருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன். இராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்துள்ளேன். கட்சிக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்றது. 2014ஆம் ஆண்டைப் போல் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியாமல் போனது. கடந்த 2014ஆம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல்காந்தி, கடந்த மாதம் 25ஆம் திகதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் முடிவை ஆதரித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்து வருகின்றனர். அந்தவகையில், மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மிலிந்த் தியோரா இன்று விலகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியாவும் இராஜினாமா செய்துள்ளார்.
