
மனைவியைத் தோளில் சுமந்து கொண்டு தடைகளைத் தாண்டி ஓடுவதே இந்த போட்டியின் விதிமுறையாகும். சுமார் 4,000 பேர் வாழும் சிறிய கிராமத்தில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ள ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் உள்ள போட்டியாளர்கள் திரளாக வந்து பங்கேற்கின்றனர்.
போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசாக மனைவியின் எடைக்கு நிகரான பியர் வழங்கப்படுவது வழக்கம். மனைவியை சுமந்துகொண்டு ஓடும் பந்தயம் ஃபின்லாந்தில் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானது.
ஆண்கள் தங்கள் வலிமையைக் காட்ட தமது மனைவிகளை சுமந்துகொண்டு ஓடும் போட்டி முதன் முதலில் அங்கு ஆரம்பிக்கப்பட்டது.
