
பிரெக்ஸிற்றுக்கான ஒக்ரோபர் காலக்கெடு உண்மையானது எனவும் இரண்டாவது வாய்ப்புக் கிடைக்க போவதில்லை எனவும் கொன்சர்வேற்றிவ் தலைமைத்துவ போட்டியாளரான ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
எவ்விதமான பிரெக்ஸிற்றின் போதும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.
பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காத பட்சத்தில் ஒப்பந்தம் எதுவுமின்றி வெளியேறுவதற்கு முழுமையான தயார் நிலையில் பிரித்தானியா இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றால் பாதிக்கப்படும் வணிகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக பணத்தை வழங்க பிரித்தானியாவுக்கு நிதி வசதி இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
