
செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவை நாளை வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்கத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்தே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
