
பெங்களூர், மங்களூர், உடுப்பி, பெல்லாரி, தார்வாட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது அமைச்சு பதவிகளை நேற்று (திங்கட்கிழமை) இராஜினாமா செய்துள்ளனர்.
அந்தவகையில் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் இராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் போது, பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி, முதலமைச்சராக நீடிக்க முடியாத நிலைமை உருவாகும்.
இத்தகையதொரு அரசியல் சூழ்நிலையிலேயே பா.ஜ.க.வினர் குமாரசாமிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதலமைச்சர் குமாரசாமி, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களென அக்கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
