
தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த கலைக் கிராமம், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் என்.யூ.எம்.எம்.டிபிள்யூ சேனாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் குறித்த மாதிரி தற்காப்பு கலைக்கிராமம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
தற்காப்புக் கலையினை அழியவிடாது அதனைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கிளிநொச்சி இராணுவ தலமையகத்தினால் படையினருக்கு தற்காப்பு கலை பயிற்சி முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
குறித்த பயிற்சியின் நிறைவாகவும், கலை பாரம்பியத்தினை பேணிப் பாதுகாக்கும் நோக்குடனும் இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலமையகத்தில் குறித்த பத்து இராவண பலம் கொண்ட தற்காப்பு கலைக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்போது பண்டைக்கால அரசாட்சி முறையில் எவ்வாறு தற்காப்புக் கலை பேணப்பட்டமை என்பதை பிரதிபலிக்கும் வகையில் விசேட நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
குறித்த கலைக் கிராமம், பண்டைக்கால வாழ்க்கை முறை, பயன்படுத்தப்பட்ட மருத்துவ முறை மற்றும் தற்காப்புக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
