
செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இனவாத நோக்குடனான கருத்துக்களே நாட்டில் வன்முறையை தூண்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரச கரும மொழிகள் வார இறுதிநாள் நிகழ்வு கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறந்த எதிர்காலத்திற்கு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சகல அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.
அரச கரும மொழிகள் அமைச்சினூடாக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் மனோகணேசனால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாகும்.
நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் ஏற்படுத்த மொழி இன்றியமையாததாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
