முத்தலாக் சட்டமூலத்துக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க.மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே தமிழிசை சவுந்தரராஜன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முத்தலாக் சட்டமூலத்துக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது தவறு.
வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க.இந்த முடிவை எடுத்துள்ளது. முத்தலாக்கினால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் எதிர்க்கின்றனர்.
வாக்குகளுக்காகவே முத்தலாக் சட்டமூலத்துக்கு சில கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.