கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.கனடாவின் வடக்கு கியூபெக், பகுதியில் மிதவை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் கிரிஃபன் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மாண்ட்ரீலுக்கு வடக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், குறித்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





