
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 75 இளைஞர், யுவதிகளுக்கு பெருந்தோட்ட சமூகத்தொடர்பாடல் வசதியளிப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவு கிடைக்காது என்ற விடயத்தை தான் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
50 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக சில காட்டிக்கொடுக்கும் நபர்கள் கூறுகிறார்கள். எனினும் தானும் அமைச்சர் மனோ கணேசனும் இணைந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்போம் என
அதுகுறித்து வேறு எவரும் உரிமைகோர முடியாது. அதேபோன்று எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யாரை வேட்பாளராகக் களமிறக்கினாலும் அவருக்கு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதை முன்னிறுத்தி செயற்படுவோம் என அவர் கூறினார்.
