
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் கறுப்பு பட்டி அணிந்து தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமைக்கு தமது எதிர்ப்பினை வௌியிட்டனர்.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கருத்து தெரிவிக்க முற்பட்ட போது சபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தோட்ட தொழிலாளர்களுக்கு எமது தலைவரினால் பெற்று கொடுக்கபட்ட சம்பளம் போதாது என கூறி நாள் ஒன்றுக்கு 50 ரூபாயினை பெற்று தருவதாக கூறியவர்கள் இதுவரையிலும் பெற்று கொடுக்கவில்லை எனவே வாக்குறுதி வழங்கியவாறு பெற்று கொடுக்க வேண்டும் என சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
இ.தொ.கா. ஆயிரம் ரூபாய் கோரிக்கையை முன்வைத்தது உண்மை. ஆனால் இறுதியில் 750 ரூபாயினை பெற்று கொடுத்துள்ளதாக இ.தொ.கா. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை தமது தலைவர் கூறியபடி வெகுவிரைவில் 50 ரூபாயினை அமைச்சர் திகாம்பரம் பெற்று கொடுப்பார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
