அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய விமர்சனங்கள் உள்ளடங்கிய இரகசிய மின்னஞ்சல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் கிம் டரோச்-இன் அண்மையில் பதவி விலகினார்.
இந்தநிலையில் அவரினால் பகிரங்கப்படுத்தப்பட்டதாக கூறப்படும் மின்னஞ்சல்களிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுத செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.