
இதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் 3 ஆம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதாக அறிவித்தது.
அதன்படி கடந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தது.
மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை 3 ஆம் திகதி முதல் நிறுத்துவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் எச்சரித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
