நாட்டில் தேசிய பாதுகாப்பு நிலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இல்லாதமையினாலேயே பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கம் பாதுகாப்புக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை என்றே தற்போதைய நிலைப்பாடுகளில் இருந்து தெரிகின்றது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனவே தற்போதைய விவகாரங்களுக்கு மத்தியில் அனைவரும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.





