
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தின் அளவை 5 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கை அணு ஆயுதம் ஒன்றின் சாத்தியமான வளர்ச்சியை துரிதப்படுத்தக்கூடும் என ஐரோப்பிய தலைவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனாலும் ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்கா மீண்டும் அமல்படுத்திய பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிப்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய சக்திகள் பொருளாதாரத் தடைகளிலிருந்து தம்மை பாதுகாக்கத் தவறிவிட்டன என குற்றம் சாட்டியுள்ள ஈரான் அதன் நடவடிக்கைகள் ஒப்பந்தத்துடன் ஒத்துப்போகும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
