(ஜெ.ஜெய்ஷிகன்)

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அரையாண்டுக்கான பொலிஸ் பரிசோதனை 20.07.2019 இம் திகதியன்று காலை பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம் பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஐய பெரமுன தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிஸ் கலந்து கொண்டு பொலிஸாரின் அணிவகுப்பை பார்வையிட்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள் மற்றும் பொலிஸ் நிலையத்தில் உள்ள வாகனங்களையும் பரிசோதனை செய்தார்
இந் நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

