
இதன்போது, மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அமீர் அலி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை
அடுத்து, சில முஸ்லிம் பிரதிநிதிகள் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
தீவிரவாதத்திற்கு மறைமுகமாக உதவிகளை மேற்கொண்டார்கள் என்றும் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்றும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் கடந்த மே மாதம் இராஜினாமா செய்துக் கொண்டனர்.
இந்த நிலையிலேயே, இவர்கள் அனைவரும் எதிர்வரும் 10 ஆம் திகதி கூடி கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டத்தொகுதியிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது, தமது சமூகம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான தீர்வினை முன்வைப்பது மற்றும் சமகால சவால்களை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
