காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றரை விடவும் அதிகமாகக் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாளை காலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 தொடக்கம் 90 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மாத்தறை ஊடாக கொழும்பு மற்றும் காலி ஆகிய கடற்பரப்பில் கடல் அலையானது 2.5 தொடக்கம் 3.5 மீற்றர் வரை உயர்வடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை காலை 9 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டி, நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் தன்மை குறைவடையும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.