
இதன்படி, கணினி வலையமைப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், பொறியியல் முகாமையாளர்கள், கட்டிடக்கலை மற்றும் அறிவியல் முகாமையாளர்கள் அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
கனடா தொழில்வாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு (ESDC), உலகளாவிய திறன்சார் நீரோட்டத்திற்கான விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்குப் பொறுப்பான மத்திய அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.
இதன்படி “கனடிய தொழிலாளர் சந்தை மற்றும் புத்தாக்க நிறுவனங்களின் தேவைகளைத் தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்கு இந்த புதுப்பித்தல் நடவடிக்கைகள் அவசியம்” என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
