பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இடைக்கால தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீள் சுழற்சிக்காக பிரித்தானியாவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டில் இருந்து 2487 மெற்றிக்தொன் கழிவுகள் 12 தடவைகளில் இலங்கைக்கு வந்துள்ளது.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட 111 கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்த கொழும்புத் துறைமுகத்திலுள்ள பிரிவொன்றிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வந்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தபோது கொண்டுவரப்பட்ட கொள்கலன்களுக்குள் இருந்து மனித உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.