
புதூர் ஆலயத்திலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட இளைஞன், இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலுடன் மோதுண்டார்.
இதனால் படுகாயமடைந்த இளைஞன், வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் புதூர் பதுகியைச் சேர்ந்த இலகநாதன் நர்மதன் (வயது 18) என்ற இளைஞனே படுகாயமடைந்தார்.
இவ்விபத்த குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
