
மாவட்டங்களின் சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மாவட்டத்தில் வசிக்கும் மக்களை நாளை (வியாழக்கிழமை) அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் அவதானத்துடன் செயற்படுதல் அவசியமாகும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று காலை 8.30 மணி வரை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பொத்துவில் பிரதேசத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
