ஒன்று 7 முச்சக்கர வண்டிகளுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயங்களுக்குள்ளான 7 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து லாம்புச் சந்தியில் இன்று (சனிக்கிழமை) குறித்த லொறி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்தமையாலே விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறி, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் மீது மோதியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.