வடகொரியாவில் நூற்றுக்கணக்கான பொது இடங்கள் பொதுமக்களுக்கு மரணதண்டனை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தென்கொரியாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தகவல் வௌியிட்டுள்ளது.நாட்டை விட்டு வௌியேறிய மற்றும் மனிதவுரிமை சார்ந்த குழுக்கள் இதனை மக்கள் மத்தியில் அச்சத்தை தக்கவைக்கும் செயற்பாடாகவே கருதுகின்றனர்.
இதன்படி சுமார் 318 இடங்கள் பொது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக வட கொரிய அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுவதுடன், அவை கொடூரமான மரண தண்டனைகளை விதிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளாக தகவல்களை திரண்டி தமது அறிக்கையில் உள்ளடக்கிய இடைக்கால நீதிபதிகள் குழுவொன்று வௌிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த வடகொரியர்கள் சுமார் 610 பேரிடம் தகவல்களை சேகரித்துள்ளது.
ஆற்றங்கரைகள், மக்கள் கூடும் பொது இடங்கள், சந்தைகள், பாடசாலைகள் மற்றும் மைதானங்கள் என்பவற்றில் இவ்வாறான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்ததாக மனிதவுரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
மரண தண்டனை வழங்கப்படும் போது சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.





