பிரித்தானியாவில் அண்மைக்காலமாக நிற அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.National Society for the Prevention of Cruelty to Children என்ற தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டிற்கும் 2016ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன வெறித்தாக்குதல்களும் வம்புக்கிழுத்தல்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், பிரித்தானியாவில் கடந்த 2017ஆம் ஆண்டிற்கும் 2018ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறுவர்களுக்கெதிரான 10,500 இன வெறுப்பு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





