ஸ்பெய்னில் பிரித்தானிய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.ஸ்பெய்ன் தீவுகளில் ஒன்றான Majorca இற்கு சுற்றுலா சென்ற 15 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமி தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவரே சிறுமியை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





