
கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றிருந்தது.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்தநிலையிலேயே மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
