இது குறித்து இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தவேண்டும் என சனப்பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் மூவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் பதற்ற நிலை அதிகரிக்கின்றது எனவும், அங்கு சமாதானம் பலவீனமான நிலையில் காணப்படுகின்றது எனவும் இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை மோசமடையும் முன்னர் மத விவகாரங்கள் மற்றும் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர்கள் உடனடியாக தலையிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் மோசமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாங்கள் இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் அதேவேளை யுத்தத்திற்கு பிந்திய நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அமெரிக்காவின் வலியுறுத்தல்கள் தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஜிம் மக்கவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் கடும் போராட்டத்தின் மூலம் பெற்ற இந்த உரிமைகள் பலவீனப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
