மட்டக்களப்பு மறைமாநில ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் சகிதம் வருகைதந்த கொழும்பு அதிமேற்றானியார் காதினால் மல்கம் ரஞ்சித் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரமதாசவின் நிதி ஒதுககீட்டில் இராணுவபடையினரால் நடைபெறும் கு றித்த தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்களை விசாரித்து தமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட அதிமேற்றா னியார் கர்தினால் மல்கம் ரஞ்சித் நாம் வெவ்வேறுபிரிவுகளாக செயல்பட்டாலும் கர்த்தருடையமக்கள் என்ற அடிப்படையில்ஒன்றுபட்டு செயல்படவேண்டிய சூல்நிலைவந்துள்ளது. நான் எமதுமக்களுக்கு பிரார்த்திப்பதுடன் என்றும் உங்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுவேன் என்று கூறினார்.
இங்கு இறந்த மற்றும் காயமுற்ற ம\க்களுக்கு நடாத்தப்பட்ட செபவழி பாட்டிலும் அதிமேற்றானியார் காதினால் மல்கம் ரஞ்சித்கலந்துகொண்டு விடைபெற்றுச்சென்றார்,இந்த சந்திப்பில் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணவிஜயசிறி மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் ,கத்தோலிக்க மதகுருமார்கள்,பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள்,மற்றும் காயமடைந்து தேறியவர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
