
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் இந்தியா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் பா.ஜ.க. அரசின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் பெரும்பாலான மாநில அரசுகள், மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டங்களால் சிறுபான்மையினர் மீது அதிக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அமெரிக்காவின் குறித்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிலளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறுவுத்துறை வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில், “மத சார்பின்மை மற்றும் அதன் கூறுகளையும் அரசு சிறப்பாகவே பாதுகாத்து வருகின்றது.
சிறுபான்மை சமூகத்தவர் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகையால் இந்தியாவின் மத சார்பின்மை குறித்து ஏனைய நாடுகள் கருத்துத் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை” என தெரிவித்துள்ளது.
