
ல் கனேடிய படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வான்குடை பயிற்சியின்போது காயமடைந்த பொம்பாடியர் பற்றிக் லப்றீ எனப்படும் கனேடிய இராணுவ வீரர் உயிரிழந்து விட்டதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நேர்ந்ததாகவும், இதுகுறித்து கனேடிய இராணுவப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த இழப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, அவருடன் இணைந்து சேவையாற்றும் சகவீரர்களுக்கும் பாரிய இழப்பு என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
