LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 21, 2019

கனேடியருக்கு ஈராக்கில் 26 வருடங்கள் சிறைத்தண்டனை

கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள
கனேடியர் ஒருவருக்கு ஈராக்கில் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனேடியரான ஃபாரூக் கலீல் முகமது (51) கடந்த 2009 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டு நிரப்பிய லொறியை பயன்படுத்தி  ஈடுபட்ட தாக்குதலில்  மூளையாகச் செயல்பட்டுள்ளார்.

ஈராக்கின் மொசூல் நகரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம் அருகே முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில், அமெரிக்க இராணுவத்தினர் ஐவரும், ஈராக்கிய பொலிசார் இருவரும் உயிரிழந்தனர்.

ஃபாரூக், கனடாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் தீவிரவாத கொள்கைகள் கொண்ட குழு ஒன்றுடன் இணைந்து இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடைபெற்றுவந்த நிலையில், அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும், அவரது தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7