(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவிலுள்ள முதியோர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று(28) நடைபெற்றது.
சமூகநல வைத்தியர்களான எம்.எம்.எம்.நிம்சாட் மற்றும் பர்சானா ஆகியோர் முதியவர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தி ஒத்துழைப்பு வழங்கினர்.
பிரதேச செயலாளர் வ.வாசுதேவனின் நெறிப்படுத்தலில் இந் நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன், திருமதி.அ.சந்திரகுமாரன், திருமதி.லு.கவாஸ்கர், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹப்னாஸ், பட்டதாரி பயிலுனர்களான ந.தினேஸ்காந்தன், ம.நிறோ, முதியோர் சங்கப் பிரதிநிதிகளான வே.சீனித்தம்பி, வே.தம்பிராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
50 இற்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.
சமூகசேவைகள் திணைக்களம் மற்றும் முதியோர் தேசிய செயலகமும் இணைந்து மேற்படி ஆயுர்வேத மருத்துவ முகாமை ஒழுங்குபடுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.
