ல்லா பிரேரணையினைவிட பொலிஸாரின் விசாரணையே தற்போது அவசியம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்தவகையில் குறித்த விசாரணைக்கு வழிவகுக்கும் முகமாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து மனப்பூர்வமாக விலக வேண்டும் என அக்கட்சியின் பிரதி தலைவர் கருணாரத்ன பரணவிதான இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது பயங்கரவாதிகளுக்கு உதவுதல் மற்றும் உத்வேகப்படுத்துதல் போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளமையினால், நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையான பிரேரணை அதற்கு தீர்வாக அமையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ரிஷாட் பதியுதீன் நிரபராதியா அல்லது குற்றவாளியா என குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தீர்மானிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு அவர் அமைச்சர் பதவியில் இருந்து மனமுவந்து இராஜிநாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் இந்த விசாரணைகளை நடத்த பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியே விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.






