
கடந்த 15 ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட பிரேரணையொன்றை கொண்டுவர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
அத்துடன், கிடைக்கவேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. இதன்காரணமாக மாநிலத்தில் வறட்சி நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் நீரை சேமிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
