LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 14, 2019

உலகில் சடங்கு என்ற பெயரில் நடக்கும் பயங்கரமான பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வுகள்

யுனிசெப் ரிபோர்ட் படி, உலகில் 30 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான பெண்கள் இது போன்ற பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்றனர் என அறியப்படுகிறது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.

எப்.ஜி.எம்? (FGM – Female Genital Mutilation) என்பது பெண்ணுறுப்பின் ஒரு பகுதி அல்லது அதன் வெளிப்புற பகுதியை அகற்றும் முறையாகும். இது எந்த ஒரு மருத்துவ காரணமும் இல்லாமல் சில நாடுகளில் சடங்கு, சம்பிரதாயம் என்ற முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.



இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா!
யுனிசெப் அறிக்கையில் இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா நாடுகளை சேர்ந்த பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த பெண்ணுறுப்பு சிதைவு சம்பவத்தால் பாதிப்படைந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சோமாலியா, குனியா, ஜைபூடீ. போன்ற பகுதிகளை சேர்ந்த 15 – 49 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிகளவில் இந்த பெண்ணுறுப்பு சிதைவால் பாதிப்படைந்துள்ளனர்.

குழந்தைகள்!
இந்த நாடுகளில் ஐந்து வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளும் கூட இந்த பெண்ணுறுப்பு சிதைவு சடங்கில் உட்படுத்தப்படுகின்றனர். உலகில் இந்த செயற்முறைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் கூட, பல நாடுகளில் சடங்கு என்ற பெயரில் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அபாயம் என்ன?
சுகாதாரம், ஆரோக்கியம் காரணமாக இதை செய்கிறோம் என இவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனால் அந்த பெண்களுக்கு நோய் தொற்று, வலி, காயங்கள், சில குறைபாடுகள் தான் உண்டாகின்றன. ஒருசிலர் இதனால் இறந்தும் உள்ளனர்.



மனித உரிமை மீறல்!
சர்வதேச அளவில், இந்த பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலாக தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு நபரின் சுகாதாரம், ஆரோக்கியம், உடல் போன்ற தனிப்பட்ட விஷயங்களை பாதிக்கிறது.

வகைகள்!
Clitoris எனும் பெண்குறி பகுதியை நீக்குதல்.
Clitoris மற்றும் Labia minora எனும் பகுதியை நீக்குதல்.
பெண்ணுறுப்பு பகுதியை குறுகிய நிலை ஆக்குதல்.
பெண்ணுறுப்பு பகுதியை தைப்பது.



பக்கவிளைவுகள்!
பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்யும் பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு, சரும தொற்று, காய்ச்சல், தடித்தல், மரணம் போன்றவை உண்டாகும் அபாயங்கள் இருக்கின்றன.

இதை தடுக்க வேண்டியது அவசியம். யுனிசெப் போன்ற நிறுவனங்கள் என்ன கூறினாலும், ஒவ்வொரு 11 நொடிக்கும் ஒரு பெண் இந்த பெண்ணுறுப்பு சிதைவு சடங்குக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைகிறார் என்பது தான் உண்மை. இது இன்றளவும் 29 நாடுகளில் செயல்முறையில் இருந்து வருகிறது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7